ஐ.நா.அமைதி காப்புப்படை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகத்தின் கண்டனம்
2024-10-13 16:31:36

கடந்த சில நாட்களாக, லெபனானில் உள்ள ஐ.நா.வைச் சேர்ந்த தற்காலிகப் படை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், அமைதி காப்புப்படை வீரர்கள் 4பேர் காயமுடைந்துள்ளனர். இது தொடர்பாக, ஐ.நா.வின் அமைதிகாப்புப்படையும் பல நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேவேளையில், இஸ்ரேலின் இச்செயல் சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறியுள்ள நிலைமையில், இஸ்ரேல் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவை கோரிக்கை விடுத்துள்ளன.

லெபனானில் உள்ள இலங்கையைச் சேர்ந்த அமைதிகாப்புப்படைவீரர்கள் இருவர் இஸ்ரேலின் தாக்குதலால் காயமடைந்தனர் என்று இலங்கையின் இராணுவ வட்டாரத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 11ஆம் நாள் தெரிவித்தார். மேலும், லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று ஐ.நா.அமைதிகாப்புப்படை முகாம்களை இஸ்ரேல் 10ஆம் நாள் தாக்கியது. அவற்றில், இரண்டு இத்தாலியைச் சேர்ந்த முகாம்கள் ஆகும். இதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த அமைதிகாப்புப்படை வீரர்கள் 2பேர் காயமடைந்தனர்.

இதற்கு, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் காரணமற்ற தாக்குதலைக் கண்டித்து, இந்த செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.