தைவான் பிரிவினைவாதம் என்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு கடும் எச்சரிக்கை
2024-10-14 19:56:26

லியன்ஹெலீஜியன்-2024பி எனும் ராணுவப் பயிற்சி அக்டோபர் 14ஆம் நாள் தைவான் நீரிணை, தைவான் தீவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நடைபெற்றது. சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தரைப்படை, கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணைப் படை ஆகிய படைப்பிரிவுகள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. பல்வகை படைப்பிரிவுகள் கூட்டாகப் போரிடும் திறனைப் பரிசோதிப்பது இந்த ராணுவப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். தைவான் பிரிவினையில் ஈடுபடும் முயற்சி போன்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு கடும் எச்சரிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்காக நியாயமான தேவையான நடவடிக்கையாகவும் இந்த ராணுவப் பயிற்சி திகழ்கிறது.

இந்த ராணுவப் பயற்சி, தைவானிலுள்ள பிரிவினைவாத சக்திகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது. இது, தைவானிலுள்ள பொது மக்களுக்கு எதிரானது அல்ல என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. தைவான் சுதந்திரம் என்ற பிரிவினைவாதம், தைவான் மக்களின் நலன்களுக்கு பொருத்தமற்றது. இந்தப்பிரிவினைவாதம், தைவானுக்கு சிக்கலை மட்டும் ஏற்படுத்தி வரும். தைவான் பிரதேசத் தலைவர் லாய் ச்சிங்-தே அக்டோபர் 10ஆம் நாள் நிகழ்த்திய இந்த உரை, ஒரே சீனா கோட்பாட்டை மீறி, தைவான் நீரிணைப் பகுதியின் அமைதிக்கு தீங்கு விளைவித்து, தைவான் உடன்பிறப்புகளின் நலன்களை கடுமையாக சீர்குலைத்துள்ளதாக, தைவான் பிரதேசத்தின் பல்வேறு துறையினர்கள் குற்றஞ்சாட்டினர்.

தைவான் விவகாரம், சீனாவின் முக்கிய நலன்களில் உள்ள மிக முக்கிய பகுதியாகும். தைவான் பிரிவினைவாதம் என்னும் ஆத்திரமூட்டும் செயல் முடிவுக்கு வராமல், சீன மக்கள் விடுதலைப் படை இதற்குப் பதிலடி கொடுத்து, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பது என்ற நடவடிக்கை நிறுத்தப்படாது.