© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அக்டோபர் 14ஆம் நாள் காலை 6ஆவது உலக ஊடக உச்சிமாநாடு சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றது. 106நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய செய்தி ஊடகங்கள், அரசு வாரியங்கள் உள்ளிட்ட 208 நிறுவனங்களும் ஐ.நா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஊடகங்களின் சீர்திருத்தம் என்பது நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். இதனைப் பற்றிய பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஊடகத் துறையில் தத்தமது புத்தாக்க அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ள பின்னணியில், ஊடகத் துறை எதிர்கொண்டுள்ள வாய்ப்பும் அறைக்கூவலும் இவ்வுச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது.