© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

இவ்வாண்டின் ஏப்ரல் 15ஆம் நாள் மற்றும் ஜூலை 8ஆம் நாள் சீனத் தேசிய கணினி வைரஸைக் கையாளும் அவசர மையம் முதலிய நிறுவனங்கள் இரண்டு சிறப்பு அறிக்கைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளன. கூறப்படும் "வோல்ட் சூறாவளி" செயல் திட்டம் என்ற பெயரில் சீனாவைப் பழிவாங்கும் அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தை அவை வெளிப்படுத்தின.
அக்டோபர் 14ஆம் நாள் சீனாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் மூன்றாவது முறையாக சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. சீனா, ஜெர்மனி முதலிய நாடுகளுக்கும், உலகளாவிய இணைய பயனர்களுக்கும் எதிராக அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் ஐந்து கண்கள் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட இணைய உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகளை இது மேலும் வெளிப்படுத்தியது. அமெரிக்க அரசு நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் மற்ற நாடுகளைக் குற்றம் சாட்டும் தொடர்புடைய சான்றுகளைப் பெற்று கொண்டு, அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட அரசியல் கேலிக்கூத்து எனக் கூறப்படும் "வோல்ட் சூறாவளி திட்டத்தை" முற்றிலுமாக இது அம்பலப்படுத்துகிறது.