வியட்நாமில் சீன-வியட்நாம் தலைமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-10-14 09:27:13

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 13ஆம் நாள் வியட்நாமில் அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஃபம் மிந் சின்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சந்திப்பின் போது லீச்சியாங் கூறுகையில், சீனா வியட்நாமுடன் இணைந்து இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டு அதியுயர் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களை விரிவாக நடைமுறைப்படுத்த விரும்புகிறது. நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஆழமாக்க விரும்புகிறது. மேலும், வியட்நாமுடன் இணைந்து பல தரப்பு மேடையிலுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி உலக நிர்வாகம் மேலும் நியாயமான திசையில் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்றும், பெரும்பாலான வளரும் நாடுகளின் உரிமைகளைப் பேணிக்காத்து மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை சர்வதேச சமூகம் கூட்டாகக் கட்டியமைப்பதை வழிக்காட்ட வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

வியட்நாம் பயணத்தின் போது, சீன மக்கள் குடியரசு மற்றும் வியட்நாம் சோஷலிச குடியரசின் கூட்டறிக்கையை இரு தரப்பும் கூட்டாக வெளியிடவுள்ளது.