© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அக்டோபர் 13ஆம் நாள், லெபனானில் உள்ள ஐ.நா.வின் இடைக்கால படையின் ரமியா முகாமின் வாசலை இஸ்ரேலின் இரண்டு டாங்கிகள் சீர்குலைத்தபின் வலுக்கட்டாயமாக முகாமில் நுழைந்தன என்று ஐ.நா.வின் இடைக்கால படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இஸ்ரேல் பலமுறை லெபனானில் உள்ள ஐ.நா. படை மீது தாக்குதல் நடத்தியதும், இஸ்ரேலின் டாங்கிகள் ஐ.நா. படையின் முகாமின் வாசலைச் சீர்குலைத்ததும் குறித்து, ஐ.நா.தலைமை செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமைதி காப்புப்படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், சர்வதேச சட்டத்தையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறியுள்ளது. இந்த செயல்கள் போர் குற்றமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
தவிரவும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுக்கு தாட் எனும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை அனுப்ப அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இஸ்ரேலின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க இராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.