இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ தொலைபேசி உரை
2024-10-15 09:31:44

2024ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அழைப்பையேற்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்.

அதில் வாங்யீ கூறுகையில், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் தீவிரமாகி வருகிற மோதல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடுமையாகக் கவலைப்பட்டுள்ளது. காசாவில் பன்முகமான நிரந்தர போர் நிறுத்தத்தை உடனடியாக நனவாக்குவது தற்போதைய அவசர கடமையாகும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஈரானிடையே உள்ள பதற்றமான நிலைமைக்குச் சீனா பெரும் கவனம் செலுத்தியுள்ளது. ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாக, இப்பிரதேசத்தின் நிலைமையைத் தணிவுபடுத்தி அமைதியை மீண்டும் மீட்டெடுப்பதில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும். பாதுகாப்பவையின் தீர்மானத்தின்படி அமைதிக் காப்புக் கடமையை நிறைவேற்ற லெபனானிலுள்ள ஐ.நா படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இஸ்ரேல் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.