சீன மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் பரிமாற்றம்
2024-10-15 10:31:37

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனா-ஈரான் உறவை இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்வதோடு, பல்வேறு நிலைகளின் பரிமாற்றங்களை நிலைநிறுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

வாங் யீ கூறுகையில், தற்போது காசாவில் நடைபெறும் மோதலால் எதிர்மறையான தாக்கம் தெளிவாக பரவியுள்ளது. பிராந்திய பதற்ற நிலைமை தீவிரமாகி வருகின்றது. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் தீவிரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை சீனா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றது. பிரதேசங்களின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கத் துணை புரியும் உகந்த செயல்களை மேற்கொள்ளுமாறு அனைத்து தரப்புகளுக்கும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்று தெரிவித்தார். பொறுப்பான பெரிய நாட்டாக, அனைத்து தரப்புகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, மோதலின் தணிவுப்படுத்துதலை முன்னேற்றுவதற்குச் சீனா ஆக்கபூர்வமாகப் பங்காற்றும். ஈரான் அரசு இணக்க முயற்சியை மேற்கொண்டு அனைத்து தரப்புகளுடன் புரிந்துணர்வை மேம்படுத்தி, பிரதேச நாடுகளின் உறவை மேம்படுத்துவதை சீனா வரவேற்கின்றது என்றார்.