© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் உடன் அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தானில் சந்திப்பு நடத்தினார்.
லீ ச்சியாங் கூறுகையில், சீன-பாகிஸ்தான் உறவு, சீனத் தூதாண்மையின் முன்னுரிமை இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய பொதுக் கருத்துக்களைச் செயல்படுத்தி, புதிய யுகத்தில் மேலும் நெருக்கமான சீன-பாகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்த சீனா விரும்புகிறது என்றார். மேலும், நாட்டின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கு பாகிஸ்தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளைச் சீனா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்குப் பிறகு, சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம், மக்களின் வாழ்வாதாரத்துக்கான உதவி உள்ளிட்ட துறைகள் பற்றிய ஒத்துழைப்பு ஆவணங்களின் பரிமாற்ற நிகழ்ச்சியில் அவர்கள் கூட்டாக கலந்து கொண்டனர்.