ஈரானிலுள்ள அணுசக்தி மற்றும் எண்ணெய் உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தாது: இஸ்ரேல் தலைமை அமைச்சர்
2024-10-15 20:03:31

அக்டோபர் 1-ஆம் நாள் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈரானிலுள்ள ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். ஈரானிலுள்ள அணுசக்தி மற்றும் எண்ணெய் உற்பத்தி தளம் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைக்காது என்று இஸ்ரேல் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு 9ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்தவர்களின் கூற்றை மேற்கோள் காட்டி, தி வாஷிங்டன் போஸ்ட் எனும் நாளிதழ் 14ஆம் நாள் செய்தி வெளியிட்டது.