தானிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பங்காற்ற விரும்புகின்றது:சீனா
2024-10-16 18:42:44

அக்டோபர் 16ஆம் நாள் உலக தானிய பாதுகாப்பு தினம். இது குறித்து, பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நிங் அம்மையார் தானிய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்புகளுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவும், பட்டினியில்லாத உலகத்தை கூட்டாக உருவாக்கவும் சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

இது குறிக்கு அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய தானிய உற்பத்தி பாதுகாப்புப் பிரச்சினையில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளில், இயற்கை சீற்றம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீனா தொடர்ந்து அவசர தானிய உதவி அளித்து வருகின்றது. அதேவேளையில், வேளாண்மை துறையின் அனுபவங்களையும் தொழில் நுட்பத்தையும் ஆக்கப்பூர்வமாக பகிர்வதன் மூலம், வளரும் நாடுகளின் தானிய உற்பத்தி திறனை உயர்த்த சீனா உதவுகின்றது என்று தெரிவித்தார்.