சீனத் தலைமையமைச்சர்-பாகிஸ்தான் அரசுத் தலைவர் சந்திப்பு
2024-10-16 09:14:07

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 15ஆம் நாள் பாகிஸ்தான் அரசுத் தலைவர் மாளிகையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் சந்தித்துரையாடினார்.

பாகிஸ்தானுடன் இணைந்து உயர் நிலை தொடர்புகளை வலுப்படுத்தி, நாட்டின் ஆட்சிமுறை அனுபவப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, தத்தமது மைய நலன் தொடர்புடைய பிரச்சினைகளில் இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கின்றன. பாகிஸ்தானுடன் சேர்ந்து வளர்ச்சி நெடுநோக்குத் தொடர்பை விரிவாக்கி, பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை முன்னேற்றி, மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றத்தை ஆழமாக்க வேண்டும். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கான முன்மாதிரித் திட்டப்பணியாக பாகிஸ்தான்-சீன பொருளாதார ண்டலத்தை உருவாக்கி, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை மேலும் நன்றாக நனவாக்க வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.