© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மும்பை மாநகரில் தைவானின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இது, அந்நாட்டிற்கான தைவானின் 3ஆவது அலுவலமாகும். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் அம்மையார் அக்டோபர் 17ஆம் நாள் தொடர்புடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
உலகில் ஒரே சீனா மட்டுமே உண்டு என்பதோடு, தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. சீனாவுடன் தூதாண்மை உறவு கொண்டுள்ள அனைத்து நாடுகளும், தைவானுடன் எந்த விதமான தொடர்பினை மேற்கொள்வதையும் சீனா எதிர்த்து வருகிறது. அவற்றில், ஒன்றுக்கு ஒன்று பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதும் அடக்கம். இது குறித்து சீனா இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே சீனா கோட்பாடு என்பது, இந்தியா சீனாவுக்கு வழங்கியுள்ள அரசியல் வாக்குறுதியாகும். இது, சீன-இந்திய உறவுக்கான அரசியல் அடிப்படையுமாகும். தனது வாக்குறுதியைப் பின்பற்றி, இந்தியா தைவான் தொடர்பான பிரச்சினைகளைச் கவனமாகக் கையாண்டு, தைவான் பிரதேசத்துடன் எந்த விதமான அதிகாரப்பூர்வமான தொடர்பினையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், சீன-இந்திய உறவை மேம்படுத்துவதில் எந்த தலையீட்டையும் தவிர்க்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்துகிறது.