7ஆவது ஹூன்ஜியௌ பொருளாதார கருத்தரங்கு தயார்
2024-10-18 11:42:06

 

7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5முதல் 10ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்துக்குள் நுழைந்துள்ளன. 7ஆவது ஹூன்ஜியௌ பொருளாதாரக் கருத்தரங்கின் ஆயத்தப் பணிகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன.

இதுவரை, 70க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் நடப்புப் பொருட்காட்சியின் தேசிய கண்காட்சிப் பகுதியில் பங்கேற்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. இப்பொருட்காட்சியில் பங்கேற்க உறுதிப்படுத்தியுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 6ஆவது பொருட்காட்சியைத் தாண்டியுள்ளது.

தொழில்களின் சூடான முன்னணி அம்சங்களுக்குப் பெரும் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு, புதிய ரக எரியாற்றல் சேமிப்பு, புதிய எரியாற்றல் வானம் உள்ளிட்ட புதிய உயர்தர உற்பத்தித் திறனுடன் தொடர்புடைய பல கிளைக் கருத்தரங்குகள் இவ்வாண்டு ஹூன்ஜியௌ கருத்தரங்கில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.