முதல் மூன்று காலாண்டுகளில் சீனத் தேசியப் பொருளாதார நிலைமை அறிமுகம்
2024-10-18 11:23:33

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் அக்டோபர் 18ஆம் நாள் முற்பகல் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் தேசியப் பொருளாதார நிலைமை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, முதல் மூன்று காலாண்டுகளில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 94 லட்சத்து 97 ஆயிரத்து 460 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், வேளாண்மை, வனத்தொழில் கால்நடை, மீன்ப்பிடி முதலிய தொழில் துறைகளின் அதிகரிப்பு மதிப்பு 5 லட்சத்து 77 ஆயிரத்து 330 கோடி யுவானை எட்டி, 3.4 விழுக்காடு அதிகமாகும். சுரங்கத்தொழில், தயாரிப்பு, மின்சாரம், வெப்பமாற்றல், நீர் முதலிய தொழில் துறைகளின் அதிகரிப்பு மதிப்பு 36 லட்சத்து 13 ஆயிரத்து 620 கோடி யுவானை எட்டி, 5.4 விழுக்காடு அதிகமாகும். சேவை துறையின் அதிகரிப்பு மதிப்பு 53 லட்சத்து 6 ஆயிரத்து 510 கோடி யுவானை எட்டி, 4.7 விழுக்காடு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.