சீன, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2024-10-19 19:33:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அக்டோபர் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங் யீ கூறுகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் திங்கள், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமையமைச்சர் ஸ்டார்மேருடன் தொடர்பு கொண்டார். தொடர்பை அதிகரிப்பது, ஒத்துழைப்பை ஆழமாக்குவது ஆகியவை குறித்து அவர்கள் முக்கிய ஒத்த கருத்தை எட்டியுள்ளனர் என்றும் பல்வேறு துறைகளில் உள்ள இரு நாட்டு பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு முறையை பன்முகங்களிலும் மீட்கவும், வர்த்தகம், நாணயம், பசுமையான வளர்ச்சி முதலிய துறைகளில் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்புகளை ஆக்கமுடன் மேற்கொள்ளவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

லாமி கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, இரு தரப்புகளின் நீண்டகால நலன்களுக்குப் பொருந்துவது ஆகியவற்றைக் கொண்ட வழிமுறையில் சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையை பயன்தரும் முறையில் கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தவிர, உக்ரைன் நெருக்கடி, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், மியன்மார் நிலைமை முதலியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.