இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 10.8 பில்லியன் டாலராக சரிவு
2024-10-19 17:12:09

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, அக்டோபர் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 1074 கோடியே 60 லட்சம் டாலர் குறைந்து, 69,043 கோடி டாலராக குறைந்துள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது சமீபத்திய ஆண்டுகளில் ஒரு வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகும். தொடர்ந்து இரண்டாவது வாரமாகவும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 370 கோடியே 90 லட்சம் டாலர் குறைந்து 70,117 கோடி டாலராக இருந்தது.

அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய செலவீன சொத்துக்கள் 1054 கோடியே 20 லட்சம்  டாலர் குறைந்து 60210 கோடியே 10 லட்சம் டாலராக இருந்தது.