சூடானில் காலரா நோய் பரவல்
2024-10-19 16:57:45

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் அக்டோபர் 18ஆம் நாள் தெரிவிக்கையில், சூடானில், சுமார் 31 லட்சம் பேர் காலரா நோய் தொற்று பாதிப்புக்குள்ளாவதற்கான இடர்ப்பாடு நிலைமையில் உள்ளனர் என்றும், அவர்களில் 5 வயதுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ச்சியான மோதல்கள், சூடானின் மருத்துவம் மற்றும் சுகாதார முறைமையைக் கடுமையாகப் பாதித்துள்ளன. தூய்மையான குடிநீர் மற்றும் இன்றியமையாத சுகாதாரச் சேவையின் பற்றாக்குறை, அந்நாட்டில் காலரா நோய் பரவலைத் தீவிரமாக்கியுள்ளது என்று இந்த நிதியம் தெரிவித்தது.

சூடான் காலரா நோய் பரவலைச் சமாளிப்பதற்கு உதவி அளிக்கும் விதம், ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் உள்ளிட்ட 3 சர்வதேச நிறுவனங்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் திங்கள், சூடானுக்கு முறையே 4 லட்சத்து 4 ஆயிரம் மற்றும் 14 லட்சத்து 7 ஆயிரத்து 200 குப்பிகள் அளவிலான தடுப்பூசிகளை வழங்கின.