உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு இயக்கு ஆற்றலாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளன: புதின்
2024-10-19 19:37:33

பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிக மன்றக் கூட்டம் அக்டோபர் 18ஆம் நாள் ரஷியாவின் மாஸ்கோவில் துவங்கியது. ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு முக்கிய இயக்கு ஆற்றலாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

புதின் கூறுகையில், தற்போது உலகப் பொருளாதாரத்துக்கு பிரிக்ஸ் நாடுகள் அளிக்கும் பங்குகள், ஏழு நாடுகள் குழு அளிக்கும் பங்குகளைத் தாண்டியுள்ளன. 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் சராசரியாக 4 விழுக்காடாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது, 1.7 விழுக்காடு என்ற ஏழு நாடுகள் குழுவின் சராசரி அதிகரிப்பு விகிதத்தையும், 3.2 விழுக்காடு என்ற உலகின் சராசரி அதிகரிப்பு விகிதத்தையும் விட அதிகம். உலகப் பொருளாதாரத்துக்கு பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு ஒத்துழைப்பைப்  பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்தும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு முதலிய புதிய உயர் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைகளில் பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்புக்கு பரந்துபட்ட வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.