வெடிகுண்டு மிரட்டலால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
2024-10-20 16:54:55

இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து உண்மையில் விமானத்திற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இலங்கை விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமானத்தின் கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து விமானம் தரையிறங்கிய போது விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த 96 பயணிகள் மற்றும் 8 விமான  ஊழியர்கள் உள்பட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைவாக வெளியேற்றப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.