தைவான் நீரிணையை கடந்த அமெரிக்கா மற்றும் கனடா போர் கப்பல்களைக் கண்காணித்து சட்டப்படி சமாளிப்பது: சீன ராணுவம்
2024-10-21 09:35:25

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் விரைவுக் கப்பலும், கனடாவின் எச்எம்சிஎஸ் வான்கூவர் போர் கப்பலும் அக்டோபர் 20ஆம் நாள் தைவான் நீரிணையை கடந்து பயணித்ததோடு, இந்த நிகழ்வை மிகவும் மிகைப்படுத்திக் கூறியுள்ளதாகச் சீன ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் செய்தித் தொடர்பாளார் லீ சி தெரிவித்தார்.

இவ்விரு கப்பல்களின் முழு பயணத்தைச் சீனக் கடற்படை கண்காணித்து சட்டத்தின்படி நடவடிக்கையை மேற்கொண்டது. அமெரிக்கா மற்றும் கனடாவின் இச்செயல் குழப்பத்தை ஏற்படுத்தித் தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்தை சீர்குலைத்துள்ளது. சீன ராணுவ கிழக்குப் பகுதியின் படைகள் எப்போதும் உயர் எச்சரிக்கையை நிலைப்படுத்தி நாட்டின் இறையாண்மைப் பாதுகாப்பையும் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தையும் உறுதியாகப் பேணிக்காக்கும் என்றும் அவர் கூறினார்.