ஐ.நா உயிரியல் பன்முகத் தன்மை குறித்த பொது ஒப்பந்தத்தில் இணைந்த தரப்புகளின் 16வது கூட்டம்
2024-10-21 15:39:42

ஐ.நாவின் உயிரியல் பன்முகத் தன்மை குறித்த பொது ஒப்பந்தத்தில் இணைந்த தரப்புகளின் 16வது கூட்டம், அக்டோபர் 20ம் நாள் மாலை கொலம்பியாவின் காலியில் தொடங்கியது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹுவாங் ருன் ஜியு இத்தொடக்க விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், குவேன் மிங்—மன்ட்ரீல் உலகளாவிய உயிரியல் பன்முகத் தன்மை கட்டுக்கோப்பின் ஏற்கனவே உள்ள இலக்கை நனவாக்க, சீனா தொடர்ந்து விடா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

உயிரியல் பன்முகத் தன்மை பாதுகாப்பு, தொடர வல்ல முறையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது, தொடர வல்ல வளங்களால் கிடைக்கும் நலன்களை நியாய முறையில் விநியோகிப்பது ஆகிய 3 அம்சங்கள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதம் நடைபெறும். உயிரியல் பன்முகத் தன்மையை பொருளாதாரக் கொள்கைகளில் சேர்க்கும் வாய்ப்புகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.