© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் நாள், உலக நகரத் தினமாகும். நகரத்தைக் கருப்பொருள் கொண்ட ஐ.நாவின் முதலாவது சர்வதேச தினமாகவும், சீன அரசின் முன்மொழிவுடன் நிறுவப்பட்ட முதலாவது சர்வதேச தினமாகவும் இது திகழ்கிறது. இவ்வாண்டின் உலக நகரத் தினத்தில், ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல், உலக வளர்ச்சி முன்மொழிவு, நகரத்தின் தொடரவல்ல வளர்ச்சி, உறைவிட சூழல் மேம்பாடு முதலிய துறைகளில், சீனா மற்றும் வெளிநாடுகளின் கொள்கைகள் மற்றும் அனுபவங்கள், சீனாவில் நடத்தப்படும் நிகழ்வுகளில் பரிமாற்றிக் கொள்ளப்படும்.
மேலும், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட நகரத் தொடரவல்ல வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் குறித்து, பல கிளை கருத்தரங்குகளும், கூட்டங்களும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.