நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றிய சீனாவின் கருத்து
2024-10-21 17:54:24

நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 21ஆம் நாள் கூறுகையில், புதிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்ததற்கு பிறகு நடத்தப்படும் முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது முதல் இதுவரை, திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைப் பின்பற்றி, பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, சர்வதேச விவகாரங்களில் ஆக்கமுடன் பங்கெடுத்து வருகிறது என்றார்.

மேலும், நடப்பு உச்சிமாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, தற்போதைய சர்வதேச சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பு, பிரிக்ஸ் அமைப்புமுறையின் வளர்ச்சி, பொது அக்கறை கொண்ட முக்கிய அம்சங்கள் முதலியவை குறித்து, ஆழமாக கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளவுள்ளார். பல்வேறு தரப்புகளுடன், பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின் நிதானமான நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்த சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.