அமெரிக்க மற்றும் கனடா கப்பல்கள் தைவான் நீரிணையைக் கடந்து பயணித்தது குறித்து சீனா நிலைப்பாடு
2024-10-21 19:15:37

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் போர் கப்பலும், கனடாவின் எச்எம்சிஎஸ் வான்கூவர் போர் கப்பலும் அக்டோபர் 20ஆம் நாள் தைவான் நீரிணையை கடந்து பயணித்ததோடு, வெளிப்படையாக வேண்டுமென்றே பரப்புரை செய்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 21ஆம் நாள் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தைவான் ஆனது, சீனாவின் உரிமைப் பிரதேசத்தில் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினை, கப்பல் போக்குவரத்து சுதந்திரப் பிரச்சினை அல்ல. சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு தொடர்பான பிரச்சினை ஆகும். எந்த நாடும் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தின் பெயரில் சீனாவின் அரசுரிமை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதை சீனா வன்மையாக எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.