புதிய தொழில் தொடங்கி கிராம வளர்ச்சிக்கு பங்காற்றும் இளைஞர்கள்
2024-10-22 10:43:51

சீனாவின் செஜியாங் மாகாணத்தின் யிவூ நகரிலுள்ள லிசூ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சமீபத்திய ஆண்டுகளில், வேளாண்மையை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுடன் இணைக்கும் புதிய தொழில் தொடங்கி, கிராமம் புத்துயிர் பெறும் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.

லிசூ கிராமத்தில் தற்போது, உணவகங்கள், பொழுதுபோக்கு, கலாச்சாரம் உள்ளிட்ட வியாபாரத்தில் 71 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. துணி சாயப் பட்டறையில், கலைப்படைப்புகளின் விற்பனை அதிகரிப்பதன் காரணமாக, அருகிலுள்ள விவசாயிகளின் வருமானமும் உயர்ந்துள்ளது. ஊதுபத்தி பட்டறையில், சீனப் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சீன மூலிகை மருத்துவத்தை ஒருங்கிணைத்து, புதுமையான ஊதுபத்திகள்  தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள பாரம்பரிய துணிக்கடை, காய்கறி தோட்டம், குடும்ப பண்ணை உள்ளிட்டவற்றின் காட்சிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலக்கட்டத்தில், லிசூ கிராமத்துக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களுடன் கூட்டாக வளர்ச்சியடைவதன் மூலம், இந்த பகுதியில் மொத்த வணிக விற்பனைத் தொகை 4 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.