சர்வதேச வங்கித் துறை செயல்பாட்டுக் கூட்டம்
2024-10-22 11:35:05

சர்வதேச வங்கித் துறை செயல்பாட்டுக் கூட்டம் அக்டோபர் 21ம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. 150க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான நிதித் துறை விருந்தினர்கள், 4 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தில் பங்கெடுத்து, “எதிர்கால நிதி, ஒருங்கிணைந்த தொடர்பு” என்ற தலைப்பு குறித்து, ஆழமாக விவாதித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

இக்கூட்டம் சீனாவின் பெருநிலப் பகுதியில் நடத்தப்படுவது இது முதன்முறையாகும். நிதி தொழில் நுட்பம், எண்ணியல் நாணயப் பாலம் மற்றும் பன்னாட்டுப் பணம் பரிவர்த்தனைச் சீர்த்திருத்தம் முதலியவை, நடப்பாண்டு கூட்டத்தில் அதிகமாகக் கவனம் செலுத்தப்படுகின்றன.