பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய பங்கு
2024-10-22 15:47:55

16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை, ரஷியாவில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்புக்கிணங்க இதில் கலந்துகொள்ளவுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விரிவாக்கப்பட்ட பிறகு முதலாவது பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். தாய்லாந்து, கியூபா, சிரியா, பெலாரஸ் முதலிய 30க்கும் மேலான நாடுகள் பிரிக்ஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை, வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் கோரிக்கைக்குப் பொருந்தியது. பிரிக்ஸ் நாடுகள் எப்போதும் பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையில் ஊன்றி நின்று வருகின்றன. உலகளவில் தொழில் துறை வினியோக சங்கிலியை நிதானமாகவும் தடையின்றியும் முன்னேற்று வருவதற்கு இது உத்தரவாதம் அளித்துள்ளது. கூட்டு நலன் மற்றும் சகிப்புத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தையும் இது விரைவுபடுத்தியுள்ளது.

எதிர்காலத்தில், மேலதிகமான நாடுகள் இவ்வமைப்பில் சேர விண்ணப்பம் செய்ததோடு, பிரிக்ஸ் அமைப்பு, சர்வதேச விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான, நிதானமான, நல்லிணக்கமான பங்குகளை மேலும் ஆற்றும். இதன் உலக பலதுருவமயமாக்கம் மற்றும் பலதரப்புவாதத்தைப் பேணிக்காக்கும் ஆற்றல் தொடர்ந்து விரிவாகும். இவ்வமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சீனா, இந்த ஒத்துழைப்பு அமைப்புக்கு உறுதியான ஆதரவளித்து, இதில் கலந்துகொண்டு வருகிறது. இவ்வமைப்பில் முக்கிய வழிகாட்டியாகப் பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.