இந்தியாவுக்கு 241.3 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
2024-10-22 19:31:47

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த 241.3 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மேற்கு வங்கத்தில் ஏழு மாவட்டங்களில் 8.96 மில்லியன் நுகர்வோருக்கு மின்சார விநியோகம் மேம்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மேற்கு வங்க மாநில மின்சார விநியோக நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் நிதி மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல் மற்றும் அறிமுகப்படுத்துதல், பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் அதன் திறனை வளர்ப்பதன் மூலம் அதன் செயல்பாட்டு திறனை உயர்த்தும்.

மக்களிடையே, குறிப்பாக மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது, பாதுகாப்பு குறித்து மாவட்ட தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.