© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன், சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகம் ஆகியவை பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 1,634 பேர்களிடம் வினாத் தாள் மூலம் நடத்திய ஆய்வின் படி, வேகமாக வளர்ந்து வரும் "பிரிக்ஸ் சக்தி" உலகக் மேலாண்மைக்கு மேலதிக இயக்கு ஆற்றலைச் செலுத்துகிறது என்றும் மிகவும் நேர்மையான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதை முன்னேற்றுவது உறுதி என்றும் பதிலளித்தவர்கள் பொதுவாக நம்புகிறார்கள்.
ஒரு சில வளர்ந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்திய சர்வதேச ஒழுங்கில் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நேர்மையான மற்றும் நியாயமான புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்குவதை முன்னேற்றுவது பிரிக்ஸ் நாடுகளின் வலுவான கோரிக்கையாக மாறியுள்ளது. பல்வேறு நாடுகள் சர்வதேச விவகாரங்களில் சமமாக பங்கேற்க வேண்டும். சர்வதேச அமைப்பு மற்றும் ஒழுங்கைக் கூட்டாக நிறுவ வேண்டும் என்று இந்த ஆய்வில் 96.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். தற்போது வளர்ந்த நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சர்வதேச ஒழுங்கு மற்றும் விதிகள் குறித்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று 72.6 விழுக்காட்டினர் ஆதரித்தனர்.
நீண்டகாலமாக, அமைதியையும் வளர்ச்சியையும் தேடுவது, ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கூட்டு வெற்றி பெறுவது ஆகியவை எப்போதுமே பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு விருப்பம் மற்றும் பொறுப்பாகும். பிரிக்ஸ் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாக, சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி கருத்து மற்றும் சாதனைகள் பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு வலுவான நம்பிக்கையையும் இயக்கு ஆற்றலையும் செலுத்துகின்றன.