© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்திய தலைநகரான டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியில் கடுமையான மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அங்கு காற்றின் தரம் "மிகவும் மோசம்" என்ற நிலையை எட்டியுள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு பிஎம் 2.5 என்ற பிரிவில் 301 முதல் 400 வரை பதிவாகியுள்ளது. இது இந்திய அரசின் "காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கருத்துப்படி, "மிகவும் மோசம்" என்ற நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணி முதல், சாலைகளில் துப்புரவு பணியின் போது தண்ணீரில் தெளித்தல், சீரான போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்தல், தனியார் வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அதன் நிறுத்தம் கட்டணம் அதிகரிப்பு, மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் மின்சார பேருந்துகள் போன்றவற்றின் சேவைகளை அதிகரித்தல், திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பதைத் தவிர்த்தல் ஆகியவை அடங்கும்.
டெல்லியில் வசிக்கும் மக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை மாசு உருவாக்கும் கட்டுமான பணிகளை தவிர்க்கவும், தனியார் வாகனங்களில் காற்று வடிகட்டிகளை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.