நேபாளத்தில் கடும் மழை பெய்ததால் காய்கறி விலை உயர்வு
2024-10-23 11:11:37

இவ்வாண்டின் செப்டம்பர் திங்கள் இறுதியில் இறுதிக்குள், நேபாளத்தில் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு, மண் அரிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் விளை நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக காய்கறி சந்தையில் வினியோகப் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, தக்காளிப்பழங்களின் விலை, கடந்த திங்களில் இருந்ததை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது.