சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையிலான மனித தொடர்பு பரிமாற்ற நடவடிக்கை
2024-10-23 15:40:25

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசான் நகரைச் சென்றடைந்து 16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம், ரஷிய தேசிய தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு நிறுவனமும் கூட்டாக ஏற்பாடு செய்த சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மனித தொடர்பு பரிமாற்ற நடவடிக்கை அக்டோபர் 22ஆம் நாள் கசான் நகரில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இதுவும் சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். மேலும் சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு என்ற நடவடிக்கையின் துவக்க ஆண்டாகும். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு தலைமையில், சீன-ரஷிய உறவு வரலாற்றில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றது. புதிய ரக பெரிய நாடுகளுக்குமிடையிலான உறவின் மாதிரியாகத் திகழ்கின்றது. சீன-ரஷிய தலைமுறை நட்பு பரவல் மற்றும் மக்களிடையே ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை முன்னேற்ற சீனத் தேசிய ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான சீன ஊடகக் குழுமம் எப்போதும் பாடுபட்டு வருகின்றது என்றார்.