சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு திசை வழிகாட்டும் இரு நாட்டுத் தலைவர்கள்
2024-10-24 16:05:57

சீன அரசுத் தலைவர் மற்றும் இந்திய தலைமை அமைச்சரின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் பதிலளித்தார். ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கெடுத்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 23ஆம் நாள் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார். அவர்கள் சீன-இந்திய உறவை சீரமைப்பது குறித்து முக்கிய ஒத்த கருத்துகளை எட்டி, இரு தரப்புறவு, நிலையான வளர்ச்சி பாதைக்குத் திசை வழிகாட்டியுள்ளதாக லின் ஜியேன் அறிமுகப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, நெடுநோக்கு மற்றும் நீண்டகாலக் கோணத்தில் சீன-இந்திய உறவை அணுகி, தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்துவதில் சீனா ஊன்றி நின்று வருகிறது என்றார். மேலும், சர்ச்சைகளை உரிய முறையில் கையாண்டு, இரு தரப்புறவு, நிலையான வளர்ச்சி பாதைக்குத் திரும்புவதை முன்னெடுத்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதி, செழுமை மற்றும் உலகின் பலதுருவமயமாக்கத்தைத் தூண்டுவதற்குப் பங்காற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.