இந்தியாவுக்கு 434.25 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்
2024-10-24 16:48:39

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்கவும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கி 434.25 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் சூரியசக்தி திட்டம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் 500 மெகாவாட் கிரிட் இணைக்கப்பட்ட சூரிய போட்டோவோல்டிக் வசதியை அமைக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கிரிட்-இணைக்கப்பட்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் என்ற இலக்கை அடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் வரைபடத்தை உருவாக்கவும், அதன் சூரிய ஆற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த திட்டம் உதவும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.