ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-10-24 16:39:17

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 24ஆம் நாள் கூறுகையில், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்தது என இரு நாட்டுத் தலைவர்கள் ஒரு மனதாக கருதினர். சீனாவும் இந்தியாவும் நெடுநோக்கு மற்றும் நீண்டகால பார்வையில், இரு நாட்டுறவைக் கையாண்டு, பிரதேச மற்றும் உலக அமைதி மற்றும் செழுமைக்கும், உலக பலதுருவமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கும் ஆக்கமுடன் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரிக்கவும், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிலையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தவிரவும், எல்லை பிரச்சினைக்கான இரு நாட்டுச் சிறப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு என்ற அமைப்புமுறையின் பங்குகளை வெளிக்கொணர்ந்து, எல்லை பகுதியிலுள்ள அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காத்து, நியானமான தீர்ப்பு வழிமுறையை நாடி, பலதரப்பு நிலைமைகளில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்கள் தெரிவித்தனர் என்றும் லின்ஜியான் கூறினார்.