பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பெருமளவான ஒத்துழைப்பு
2024-10-24 15:21:34

16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு 23ஆம் நாள் ரஷியாவின் கசான் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டை, தெற்குலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய வழியாகவும் உலக மேலாண்மை மற்றும் சீர்திருத்தத்தை முன்னேற்றும் முன்னோடி சக்தியாகவும் கட்டியமைக்க வேண்டும் என்றார்.

தற்போது, பிரிக்ஸ் நாடுகளின் மொத்த பொருளாதார அளவு உலகளவில் 30 விழுக்காட்டை வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், உலகின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி மற்றும் உலகின் வர்த்தகத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். மேலும், பிரிக்ஸ் நாடுகள், உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிகாப்பதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்று பொது மக்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு, வளர்ச்சி, உலக மேலாண்மை, நாகரிக பரிமாற்றங்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில், ஐந்து முன்மொழிவைச் சீனா முன்வைத்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டின் சாதனைகளைப் பார்த்து, சீனா முன்வைத்த தொடர்ச்சியான உலக முன்மொழிவுகள் மற்றும் சொந்த வளர்ச்சி அனுபவம் பிரிக்ஸ் வளர்ச்சி விருப்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படுவது, பிரிக்ஸ் நாடுகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிரிக்ஸ் ஒத்துழைப்பு குறித்த "காலத்தின் கேள்விக்கு" சிறப்பாக பதிலளிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.