பின்லாந்து அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்
2024-10-25 20:14:08

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டுப்பு அக்டோபர் 28 முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஸ்டுப்புவின் சீனப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியேன் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தலைமையமைச்சர் லீ ச்சியாங் அவரைச் சந்தித்து, இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட அம்சங்கள் பற்றி ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி கொள்ளவுள்ளார் என்று தெரிவித்தார்.

பின்லாந்துடன் இணைந்து உயர் நிலை தொடர்பையும் பாரம்பரிய நட்புறவையும் நிலைநிறுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக முதலீடு, பசுமையான வளர்ச்சி முறை மேம்பாடு முதலிய துறைகளில் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகளாவிய அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக லின் ஜியேன் தெரிவித்தார்.