பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீனா படைத்த முன்னேற்றங்கள்
2024-10-25 20:06:34

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 22ம் நாள் முதல் 24ம் நாள் வரை, ரஷியாவில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். இப்பயணம் பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்தார். கசான் நகரில் 48 மணி நேரத்துக்குள், ஷிச்சின்பிங் பத்துக்கும் மேலான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, அதிகமான சாதனைகளைப் படைத்துள்ளார் என்று வாங்யீ தெரிவித்தார்.

முதலாவதாக, ஷிச்சின்பிங்கின் பயணம், மாபெரும் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் புதிய கட்டத்தைத் திறந்து வைக்கும். இவ்வுச்சிமாநாட்டில் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் உயர் தர வளர்ச்சிக்கான 8 நடவடிக்கைகளுக்கு ஷிச்சின்பிங் ஆதரவு தெரிவித்தார். இது, மாபெரும் பிரிக்ஸ் ஒத்துழைப்பின் அளவையும் ஆழத்தையும் மேலும் விரிவாக்கும். பிரிக்ஸ் நாடுகள், திறப்பு, பொறுமை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி கொண்ட ஆரம்ப மனத்தைப் பின்பற்ற வேண்டும். மேலதிக நாடுகள் பலவிதமான முறையில் பிரிக்ஸ் இலட்சியத்தில் ஈடுபட வரவேற்கிறோம் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, அவரின் பயணம், உலகின் வளரும் நாடுகளை ஒருமித்து, புதிய பொது கருத்துகளைச் சேகரிக்கிறது. சீனாவின் தலைமையில் பல ஒத்துழைப்புகளை தொடங்குவதை ஷிச்சின்பிங் அறிவித்த செயல்பாடு, ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தை நாடிய வளரும் நாடுகளின் விருப்பத்துக்குப் பொருந்தியது.

மூன்றாவதாக, ஷிச்சின்பிங்கின் பயணம், அரசுத் தலைவர்களின் தூதாண்மைக்குப் புதிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங், பல நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்தி, இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, பல புதிய ஒத்த கருத்துகளை எட்டியுள்ளார்.

சீனா, பிரிக்ஸ் மற்றும் உலகின் வளரும் நாடுகளுடன் இணைந்து, இலக்கை நனவாக்கும் புதிய வளர்ச்சி பாதையில் நடைபோடும் என்று வாங்யீ தெரிவித்தார்.