© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஈரானின் பல பகுதிகளில் இராணுவ இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் "துல்லியமான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை" முடித்துள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை 26ஆம் நாள் கூறியுள்ளது.
இஸ்ரேல் போர் விமானங்கள், ஈரானின் ஏவுகணை உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அதே வேளையில், ஈரானின் தரையிலிருந்து ஆகாயத்துக்குப் பாயும் ஏவுகணை ஏவுதளம் உள்ளிட்ட இராணுவ அமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது என்று இஸ்ரேல் இராணுவம் மற்றொரு அறிக்கையில் கூறுகின்றது.
ஈரானின் இராணுவம் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக வெற்றிகரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன. இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் "குறைந்த இழப்புகளை" ஏற்படுத்தியுள்ளது என்று ஈரானின் இராணுவம் அதே நாள் தெரிவிக்கின்றது.
ஈரானின் விமானப் போக்குவரத்து 26ஆம் நாள் காலை 9 மணி முதல் இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று பயணியர் விமான சேவையின் செய்தித்தொடர்பாளர் ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி, ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.