© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தைவான் பிரதேசத்திற்கு மொத்தம் 198 கோடியே 80 லட்சம் டாலர் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அக்டோபர் 26ஆம் நாள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
26ஆம் நாளன்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த ஆயுத விற்பனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில்
சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது, ஒரே சீனா கோட்பாடு, சீனா-அமெரிக்கா இடையே மூன்று கூட்டறிக்கைகள், குறிப்பாக 1982ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அறிக்கை ஆகியவற்றை கடுமையாக மீறுகிறது. இந்த விற்பனையானது, சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறி, சீன-அமெரிக்க உறவைச் சீர்குலைத்து, தைவான் நீரிணையிலுள்ள அமைதி மற்றும் நிலைப்புத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது ‘தைவான் சுதந்திரம்’ பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான தகவலை அனுப்புகிறது என்று தெரிவித்தார்.
சீனா இந்த ஆயுத விற்பனையை கடுமையாக கண்டித்து இதை உறுதியாக எதிர்ப்பதாகவும், இது குறித்து அமெரிக்காவிடம் சீனாவின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
தைவானை ஆயுதமயமாக்குவதையும் தைவான் நீரிணையின் அமைதியைச் சீர்குலைக்கும் அபாயமான செயலையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவை சீனா கோருகிறது. சீனா இதற்கு உறுதியான பதிலடி கொடுக்கும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாக பேணிக்காப்பதற்காக சீனா தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.