மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்பவை கூட்டம் நடத்தவுள்ளது
2024-10-28 09:37:01

ஐ.நா பாதுகாப்பவை மத்திய கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து 28ஆம் நாள் மாலை 3:00 மணி அவசர கூட்டத்தை நடத்தவுள்ளதாக சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர் ஒருவர் 27ஆம் நாள் தெரிவித்தார்.

பாதுகாப்பவையின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான ஸ்விட்சர்லாந்து பிரதிநிதிக் குழுவிலிருந்து பெற்ற தகவலின்படி, மத்திய கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து 28ஆம் நாள் அவசர கூட்டத்தை நடத்த வேண்டுமென ஈரான் முன்னதாக பாதுகாப்பவையிடம் விண்ணப்பம் தொடுத்துள்ளது.