போரை நிறுத்துவது அவசரமானது – சீன வெளியுறவு அமைச்சகம்
2024-10-28 17:39:27

வேறொரு நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதை சீனா எதிர்க்கிறது. தற்போதுள்ள மத்திய கிழக்குப்  பகுதி மிகவும் பதற்றமான நிலையில் உள்ளது. பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு அபாயம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு தரப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். அண்மைக்காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களே, போரை நிறுத்துவது அவசரம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 28ஆம் நாள் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் 26ஆம் நாளன்று நடத்திய தாக்குதல் குறித்து அவர் கூறுகையில் இவ்வாறு கூறினார்.

பன்னாட்டுச் சமூகம், குறிப்பாக, செல்வாக்குமிக்க பெரிய நாடுகள், ஆக்கப்பூர்வமாக பங்காற்றி, பிராந்தியத்தின் பதற்ற நிலையைத் தணிப்பதற்கான தேவையான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்றும் லின் ஜியான் தெரிவித்தார்.