ஐரோப்பிய ஒன்றியம் சீனத் தொழில் நிறுவனத்துடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சீனா எதிர்ப்பு
2024-10-28 16:00:52

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புடைய தொழில்நிறுவனங்களுடன் விலை நிர்ணயப் பேச்சுவார்த்தைத் தனியாக நடத்தியது குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  28ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சீன வணிக சங்கம் பல்வகை சீனத் தொழில்நிறுவனங்களின் முழுமையான அதிகாரத்தைப் பெற்று இத்தொழிலின் நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விலை நிர்ணயத் திட்டத்தை முன்வைத்துள்ளது என்று அக்டோபர் 25ஆம் நாள் சீன வணிகத் துறை அமைச்சர் வாங்வேன்டௌ ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாகத் துணை தலைவர் டோம்ப்ரோவ்ஸ்கிஸுடன் நடத்திய காணொளி பேச்சுவார்த்தையில் சீனா தெளிவாகத் தெரிவித்துள்ளது. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, விலை நிர்ணயம் பற்றி சில தொழில்நிறுவனங்களுடன் ஐரோப்பிய தரப்புகள் தனியாக கலந்தாய்வு நடத்தினால், இரு தரப்புக்குமிடையே உள்ள நம்பிக்கையையும் முழு கலந்தாய்வின் முன்னேற்றப் போக்கையும் சீர்குலைக்கும். விலை நிர்ணய ஒப்பந்தத்தின் பிந்தைய நடைமுறையாக்கம் மற்றும் கண்காணிப்புக்கும் மேலதிக நிர்வாக செலவுகளை அதிகரிக்கும் என்றார்.