ஜப்பானிய பிரதிநிதிகள் அவை தேர்தலுக்கான முடிவு
2024-10-28 15:14:52

அக்டோபர் 28ஆம் நாள் ஜப்பானின் 50ஆவது பிரதிநிதிகள் அவை தேர்தலுக்கான இருக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானின் விப்ரல் ஜனநாயகக் கட்சிக்கு 191 இடங்களும், ஜப்பானிய கொமெய் கட்சிக்கு 24 இடங்களும் கிடைத்தன. இரு கட்சிகள் ஏற்படுத்திய ஆளும் கூட்டணி மொத்தம் 215 இடங்களை வென்று, பிரதிநிதிகள் அவையின் 465 இடங்களில் பாதியளவு அதாவது 233 இடங்களை எட்டவில்லை.

விப்ரல் ஜனநாயகக் கட்சி "அரசியல் மற்றும் பணம்" பிரச்சினையை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் சீர்திருத்தும். இந்த பிரதிநிதிகள் அவை தேர்தலின் முடிவை உண்மையிலேயே ஏற்றுக்கொள்கின்றது. இரு கட்சிகளுக்குமிடையிலான தலைவர்களின் பேச்சுவார்த்தையை இரு கட்சிகளும் மேற்கொண்டு, கூட்டு ஆளும் பணியைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று ஜப்பான் தலைமையமைச்சர் இஷிபா ஷிகெரு கூறினார்.