தயார் நிலையில் ஷென்சோ-19 விண்கலம்
2024-10-29 09:18:54

ஷென்சோ 19 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் பறத்தல் கடமை பற்றிய செய்தியாளர் கூட்டம் அக்டோபர் 29ஆம் நாள் முற்பகல் ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் நடைபெற்றது. இக்கடமைக்கான தலைமையகத்தின் முடிவின்படி, திட்டமிட்டபடி பெய்ஜிங் நேரம், அக்டோபர் 30ஆம் நாள் 4:27 மணியளவில் ஷென்சோ-19 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இக்கடமை, விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக் காலக்கட்டத்தின் மனிதரை ஏற்றிச் செல்லும் 4ஆவது கடமையாகும். இது, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணியின் 33ஆவது பறத்தல் பணி என்று செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஷென்சோ-19 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், அடுத்த ஆண்டின் ஏப்ரல் திங்கள் அல்லது மே திங்கள் பூமிக்குத் திரும்புவர். ஷென்சோ-18 மற்றும் 19 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் கடமைகளைப் பரிமாறிக்கொண்டதற்கு பிறகு, ஷென்சோ-18 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நவம்பர் 4ஆம் நாளில் பூமிக்குத் திரும்புவர். ஷென்சோ-19 விண்கலம் பயணிக்கும் போது, 86 விண்வெளி அறிவியல் ஆய்வுகள் மற்றும் சோதனைகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.