எந்த ராணுவ சாகசமும் பொறுப்பற்றது: சீனப் பிரதிநிதி
2024-10-29 15:21:01

அக்டோபர் 26ஆம் நாள் ஈரானின் பல பகுதிகளின் மீது இஸ்ரேல் பலமுறை வான் தாக்குதல்களை நடத்தி ஈரானிலுள்ள பல கட்ட்மைப்புகளைத் சேதப்படுத்தியதுடன், மக்களுக்கு காயத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் செயல்களால் தீவிரமாகி வரும் நிலைமை குறித்து சீனா கடும் கவலையை தெரிவித்துள்ளதாக 28ஆம் நாள் நடைபெற்ற மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் அவசரக் கூட்டத்தில், ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் கூறினார். பின் விளைவைப் பொருட்படுத்தாமல் இருக்கும் எந்த ஆத்திரமூட்டல் செயலும், போரைத் தீவிரமாக்கும் ராணுவ சாகசம் பொறுப்பற்றதாகும். மேலும், தவறான தீர்வு ஏற்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம். பேரழிவுடன் கூடிய பின்விளைவைக் கொண்டு வரக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.