முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து தொகை 5.6விழுக்காடு அதிகரிப்பு
2024-10-29 10:35:58

சீன சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம் இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளின் சரக்கு போக்குவரத்து தரவுகளை 29ஆம் நாள் வெளியிட்டது. இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரம் நிலையான போக்கில் வளர்ந்ததோடு, தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளது. சரக்குப் போக்குவரத்து நிலையான வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு சீரான போக்கில் வளர்ந்து வருகிறது. இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளில், சீனச் சரக்குப் போக்குவரத்தின் மொத்த தொகை 2கோடியே 58லட்சத்து 20ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 5.6விழுக்காடு அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில், தொடர்புடைய கொள்கைகளின் நடைமுறையாக்கத்துடன், சரக்குப் போக்குவரத்துக்கான தேவையில் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வான மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92விழுக்காட்டுக்கு மேலான தொழில்துறைச் சரக்கு போக்குவரத்தின் மொத்த தொகையில் கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, நேர்மறையான அதிகரிப்பு காணப்பட்டது. அவற்றில் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் தொழில்துறையின் சரக்குப் போக்குவரத்து தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 9.1விழுக்காடு அதிகரித்துள்ளது.