© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தொழில் துறையில் புகார் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மின்சார வாகனங்கள் மீது மானிய எதிர்ப்பு விசாரணையை மேற்கொண்டு, அதிக சுங்க வரியை கூடுதலாக வசூலிக்க தீர்ப்பு அளித்து. இந்த செயல் வகை, வர்த்தகப் பாதுகாப்புவாதம் தான் என்று சீனா தெரிவித்தது.
30ஆம் நாள் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் மேலும் பேசுகையில்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இச்செயல், சீனா மற்றும் ஐரோப்பியா இடையேயான தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலி சார்ந்த ஒத்துழைப்புக்கு தீங்கு விளைவிப்பதாகவும், ஐரோப்பிய நுகர்வோரின் நலன்களைப் பாதிப்பதாகவும் அமையும். அது ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சியைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
ஆக்கப்பூர்வமான முறையில் சீனாவுடன் இணைந்து கலந்தாய்வை முன்னெடுக்கவும், நல்லெண்ணத்துடனும் வளைந்து கொடுக்கும் முறையிலும் தீர்வு காணவும், வர்த்தக சர்ச்சையைத் தீவிரமாக்கமால் தவிர்க்கவும் ஐரோப்பிய தரப்பு செயல்பட வேண்டும் என்றும் லின் ஜியான் வலியுறுத்தினார்.
சீன மின்சார வாகனங்கள் தொடர்பான விசாரணை தீர்ப்பை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அக்டோபர் 29ஆம் நாள் வெளியிட்டது என்று தகவல் வெளியானது.