சீனத் தைவான் பிரதேசத்துக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு உறுதியான எதிர்ப்பு: சீனா
2024-10-30 15:36:09

தைவானுக்கு 198.8கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது குறித்து சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ட்சூஃபுன்லியேன் சீனாவின் நிலைப்பாட்டை அக்டோபர் 30ஆம் நாள் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பதைச் சீனப் பெருநிலப்பகுதி உறுதியாக எதிர்க்கிறது. அமெரிக்கா பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே சீனா எனும் கொள்கை மற்றும் சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளின் விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். “தைவான் சுதந்திரத்தை” ஆதரிக்காது என்ற அமெரிக்க தலைவர்களின் வாக்குறுதியைச் செயல்களில் காட்ட வேண்டும். தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும். “தைவான் சுதந்திரம்” என்ற பிரிவினை சக்திக்கு தவறான தகவல் வழங்கலை நிறுத்தவும் வேண்டும். ஆயுதங்களை வாங்குவதன் மூலம், பாதுகாப்பை வாங்க முடியாது. அது தைவானை மேலும் தீவிரமாக்கும் சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளச் செய்யும் என்று அவர் லைய்சின்தே அதிகார வட்டாரத்திற்கு கடுமையாக எச்சரித்தார்.